
முன்னனி உற்பத்தி நிறுவனமொன்றின் பெயரை வைத்து போலி கிருமிநாசினி மற்றும் திரவங்களை விற்பனை செய்து வந்த நபரொருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கண்டி பிரதேசத்தில் உள்ள அலிமுடுக்குவ பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விற்பனை நிலையத்திலிருந்து அண்டசெப்டிக் திரவம் மற்றும் கிருமி நாசினி போத்தல்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் போலி அண்டிசெப்டிக் திரவமானது நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





