உணவின் சுவையை மூளைக்கு எடுத்து செல்லும் வகையில் மென்று சாப்பிட வேண்டும்.இவ்வாறு உணவை சாப்பிடும் போது இரைப்பிற்கு செல்கின்ற உணவு நல்ல முறையில் ஜீரணமாகின்றது.மேலும் இதன் மூலம் உணவில் உள்ள சத்து முழுவதையும் உடல் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
உணவினை மென்று சாப்பிடாமல் வேகமாக சாப்பிடும் போது அது பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்திவிடுகிறது.அதாவது நாம் வேகமாக சாப்பிடும் போது உமிழ் நீரை சுரப்பதற்கு முன்னரே உணவானது இரைப்பையை அடைந்த விடுகிறது.இதன் காரணமாக செரிமானமின்னை அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே உணவை மென்று சாப்பிடுவதே மேற்கண்ட நோய்களில் இருந்து விடுபட வழியாகும்.





