தனி மற்றும் குறுகிய கால பயன்பாட்டினை உடைய ப்ளாஸ்டிக் 31 ஆம் திகதி முதல் தடை

0
411

தனி பாவனை மற்றும் குறுகிய கால ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் அதிகாரங்களின் படி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு பொதி செய்யப்படும் ப்ளாஸ்டிக்கை தவிற காற்றடைக்கப்பட கூடிய விளையாட்டு பொருட்கள், ப்ளாஸ்டிக் இனை உடைய கொட்டன் பட்ஸ் மற்றும் 20 மில்லி மீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பெக்கட் ஆகியவற்றிற்கு குறித்த திகதிகளில் இருந்து தடை விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.