நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்தது

0
652

நாட்டில் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 882 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57, 159 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 63,293 ஆக காணப்படுவதோடு அவர்களில் 5,821 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.