ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் தீப்பரவல்

0
362

ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது 29 ஆம் திகதி இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தீ பரவிய சந்தர்ப்பத்தில் 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒக்டோம்பர் மாதம் ருமேனியா புகாரஸ்டில் ஏற்பட்ட தீப்பரவலில் 64 பேர் வரை இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ருமேனியா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடுமையான சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.