திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத இருக்கைகளுக்கு அனுமதி-மத்திய அரசு

0
529

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் அங்கு கொரோனா தொற்று பரவல் குறைவடைய தொடங்கியமையினால் பல்வேறு பகுதிகளில் கட்டம் கட்டமாக தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

அதன்படி மத்திய அரசு கடந்த ஒக்டோம்பர் மாதம் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியது.எனினும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய 50 வீத இருக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசினால் நாளை முதல் திரையரங்குகளில் 100 வீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதார வழிகாட்டுதல் தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் எனவும் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.