இணையத்தளம் ஊடாக இசைக்கருவிகள் மற்றும் கணனி உபகரணங்கள் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை CID இனர் வெலிகம பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் பொருட்களை முன்பதிவு செய்யும் நபர்களிடம் முற்பணங்களை பெற்றுள்ளதோடு இவ்வாறு பலரிடம் 10 000 ரூபாவிற்கும் மேலதிகமான பண மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இது போன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனருக்கு 071 859 1753 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தகவல்களை வழங்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய நாத்தாண்டி பிரதேசத்தில் வசிப்பராவர் எனவும் அவரிடமிருந்து 6 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





