இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2.65 லட்சம் பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 3 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.99 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.





