தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைகிறது – அடுத்து மூன்று நாட்களுக்கு மழை அதிகரிக்க கூடும் என தெரிவிப்பு

0
474

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக உருவாகின்றது.வடகிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தம் அடுத்து 24 மணித்தியாலத்தில் சூறாறவளியாக மாற்றமடையும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நாட்டை சுற்றியுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீவு முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் உயர் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.