எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

0
476

தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் அவரது மனைவிக்கு தென்பட்டதையடுத்து நேற்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.