இந்தியாவில் 2 ஆம் கட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதற்கு 3 ஆவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஏனைய நாடுகளில் உள்ள பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களிடம் பெறப்படும் மின்னூட்டங்களை பொருத்து இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி அமுலுக்கு கொண்டு வரப்படும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் வைத்தியர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாவது, “பூஸ்டர் கொவிட் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதியளவு விஞ்ஞான ரீதியான ஆதராங்கள் இல்லை.ஆகவே பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை.தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் 2 ஆவது தடுப்பூசியை முழுமையாக செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும்.இச்சந்தரப்பத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஆரம்பித்தால் தகுதியுடைய சிலருக்கு 1 ஆவது தடுப்பூசி கூட கிடைக்காமல் போய்விடும்” என்று கூறியுள்ளார்.





