மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்கு பயணித்த பேருந்து!

0
241

மாகாணங்களுக்கிடயில் பயணக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி அநுராதபுரதத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று(01) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர் கெக்கிராவ பொலிஸாருக்கு தகவலை வழங்கியதை அடுத்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வீதித் தடையில் வைத்து பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்ட பொழுது குறித்த பேருந்து மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு உரிமம் பெற்றிருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் சம்பவ இடத்தில் இறக்கி விடப்படுள்ளதுடன் பேருந்தை பொலிஸார் கைப்பற்றி கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பயணிகள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டதால் தொழில் நிமித்தம் பயணம் செய்த பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று காலை தொடக்கம் தம்புள்ளை நகரத்தில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் போக்குவரத்திற்காக இயக்கப்பட்ட நிலையில் பயணிகளில் பெரும் பற்றாக்குறை காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.