வங்காலை-சிறுநாவற்குளம் பிரதான வீதியில் சிரமதானம் முன்னெடுப்பு

0
427

இன்று காலை 9.00 மணிக்கு வங்காலை-சிறுநாவற்குளம் பிரதான வீதியில் துப்பரவு பணியாளர்களின் உதவியுடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிரமதானம் பணியானது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களின் பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதான வீதியில் குப்பைகளை எறிவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதோடு அவ்வாறு மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் தி.பரஞ்சோதி மேலும் தெரிவித்துள்ளார்.