ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.00 மணிவரை வாதுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் வழங்கள் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி வாதுவ,வஸ்கடுவ,பொந்துபிடிய,களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு,கட்டுகுருந்த,நாகொட, பெந்தொட,பயாகல,பேருவலை,பொம்புவல-பிலிமினாவத்த மற்றும் அலுத்கம-தர்கா ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வழங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்தின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் வழங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.





