கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது

0
535

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 748 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,373 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 82,430 ஆக காணப்படுவதுடன்,அவர்களில் 3,593 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.