நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 300 மாணவர்கள் வரை கடத்தி செல்லப்பட்டுள்ளனர்

0
562

நைஜீரியாவில் உள்ள சம்பாரா மாகாணத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஒரு பாடசாலையினுள் உள்நுழைந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி துப்பாக்கிதாரிகளால் சுமார் 300 மாணவர்கள் வரை கடத்தப்பட்டுள்ளதாக பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜீரிய அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளால் கப்பம் பெறும் நோக்குடன் பாடசாலை மாணவர்கள் கடந்த சில தினங்களாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்களில் வெளியடப்பட்டுள்ளது.