சாதாரண தர பரீட்சார்த்தியொருவரை போல பரீட்சைக்கு தோற்றிய நபர் கைது

0
336

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு பரீட்சார்த்தியொருவரை போல பரீட்சைக்கு தோற்றிய நபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிலாவத்தை பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சார்த்தி ஒருவருக்கு சார்பாக தோற்றியமையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பரசங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள மடாதுகம பரீட்சை நிலையத்திற்கு தோற்றிய மாணவர் ஒருவரை தாக்கிய வேறு பாடசாலைகளை சேர்ந்த முன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.