ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எல்.பி.எல் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய சதியில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இருப்பினும் அவர் இது தொடர்பாக நீதிமன்றில் தாக்கல் செய்த முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன் பிணை மனுவானது கொழும்பு மேலதிக காஞ்சனா நெரஞ்சலடி சில்வா தலைமையில் ஆராயப்பட்ட நிலையிலேயே நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அத்துடன் சச்சித்ர சேனாநாயக்க இது தொடர்பாக விளையாட்டுத்துறை முறைக்கேடுகள் தொடர்பாக விசேட விசாரணைப்பிரிவில் வாக்குமூலங்களை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





