ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

0
472

காலியில் உள்ள மினுவங்கொட சுரங்கத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரழந்தவர் தவலம ஹபரகட பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பத்தும் புஷ்ப விக்ரமசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ள்து.

காலி முதல் மாத்தறை நோக்கி பயணித்த ரயிலினால் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.