அடுத்த மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

0
489

அடுத்த மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தீரமானம் நேற்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடிய போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.