யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி

0
472

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.ஸ்ரீ.சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை நாளை காலை துணைவேந்தரால் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.