இந்தோனேஷியாவில் 44 ஆண்டுகள் பழமையான ஜேர்மனியின் தயாரிப்பான நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளது.
ஆர் ஐ நங்காலா 402 எனும் பெயரினை கொண்ட குறித்த நீர்மூழ்கி கப்பலானது நேற்றைய தினம் பாலைத்தீவிற்கு அருகில் பயற்சயில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வேளை திடீரென குறித்த கப்பலில் இருந்து சமிஞ்சை பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகளில் இராணுவம் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் சிங்கப்பூர்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





