நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் பிலியந்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் 79 வயதுடைய பெண்,தெஹிஹத்தகண்டி பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண்,மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண்,வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண், திவுலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண்,பெபிலியாவல பிரசேத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண்,அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண்,கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண்,பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் நாளொன்றில் அதிகளாவான தொற்றாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
அதன்படி நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 108,120 ஆக அதிகரித்துள்ளது.இதற்கமைய வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து நேற்றைய தினம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக காணப்படுகின்றது.இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.





