பல மாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

0
229

ஊவா,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ வரை பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய,சப்ரகமுவ,தென்,ஊவா,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் தென் கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.