அம்பாறை பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவருக்கு,இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதினை உடைய கருப்பு பூஞ்சை உடைய கொரோனா தொற்றாளர்,மே 04 ஆம் திகதி அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போது, வேறொரு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக,அம்பாறை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் உபுல் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதற்கு முன்னரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,இது இந்தியாவில் பரவி வரும் பூஞ்சை தொற்று நோய் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைத்தியர் உபுல் விஜேநாயக்க தெரிவித்துள்ளதாவது,வைத்தியசாலையில் கணிசமான எண்ணிக்கையிலான நோயளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இருப்பினும் அவர்களில் எவருக்கும் இவ் வகையான பூஞ்சை தொற்று பதிவாகவில்லை என தெரிவித்தார்.
மேலும் இந்த பூஞ்சை தொற்று,தொழு நோய் மற்றும் காசநோய் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு நிலை எனவும்,இந்த பூஞ்சை தொற்று இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் காணப்படும் எனவும்,இருப்பினும் இந்தியாவில் பரவி வரும் பூஞ்சை தொற்று வேறு வகையை சார்ந்தது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இத தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் இறுதி முடிவுகள் நாளை(24) வெளியிடப்படும் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.





