பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்புகளை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,லக்ஷ்மன் கிரியெல்ல,அஷோக் அபேசிங்க,துஷார இதுநில் ஆகியார் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்றைய தினம் கொழும்பில் உள்ள மாகஸ் பிரனாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும்,அங்குள்ள ஊழியர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மாத்தறை பிரதேசத்தில் வைத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தண இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,”எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு எவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டது என கண்டுப்பிடிக்க முடியாதுள்ளது எனவும் இருப்பினும் பாரளுமன்றத்திற்குள் எவ்வித ஆபத்தும் இல்லை”என அவர் தெரிவித்துள்ளார்.





