2020 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதால், பாடசாலையில் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய சான்றிதழ்கள் இல்லாமல் இணையவாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மாணவர்கள் apply2020@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.





