மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

0
333

எரிவாயு விலை தொடர்பாக மீண்டுமொரு கலந்துரையாடல் ஒன்று இன்று(16) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவுகின்ற எரிவாயு விலைகளுக்கு அமைய உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதற்கு எரிபொருள் நிறுவனங்கள் கோரியிருந்தன.

அதற்கமைய உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 500 ரூபாவால் உயர்த்த வேண்டும் என அந்நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று(15) வர்த்தக அமைச்சில்,வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

அங்கு எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இறுதி முடிவை எடுக்க முடியாததால்,இன்றைய தினம் மீண்டும் அதுதொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும்,அதன்போது போது இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள எதரிபார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.