நாளைய தினம் ஒன்லைன் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு

0
342

இரண்டாம் மொழி பயிற்சி பெறும் ஆசிரியர்கள் நாளை(16) காலை ஒன்லைன் போரட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் மொழி பயிற்சி பெறும் ஆசிரியர்கள்,நாளை(16) காலை 9 மணிக்கு ஒன்லைன் ஊடாக போரட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக,இரண்டாம் மொழி பயிற்சி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.யு.எம் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலதிகமாக தெரிவித்துள்ளதாவது,”தேசிய சகவாழ்வு உரையாடல்கள் மற்றும் அரச உத்தியோகபூர்வ மொழி அமைச்சின் கீழ் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் குறித்த பயிற்சி நடைபெற்றது.பின்னர் எங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.அதன்பின்னர் குறித்த பயிற்சி நெறி முழுமையாக நிறுத்தப்பட்டது.இதுதொடர்பாக உரிய அதிகாரிகளிடம் வினவிய போது சரியானதொரு பதில்கள் கிடைக்கவில்லை.அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக 2 போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.அப்போதும் கூட எங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.2020 பெப்ரவரி மாதம் எங்களுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்தனர் குறித்த பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று.அதன்பின்னர் உரிய நிறுவனத்திடமிருந்து எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை”.

“குறித்த பயிற்சி வகுப்பில் 1300 பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரை அரசு தொழில்களில் பணிபுரிந்து அதனைவிட்டு வந்தவர்களாவர்.2 வருடங்கள் ஆகின்றன.இருப்பினும் இதற்கு எந்தவொரு உரிய பதில்களும் கிடைக்கவில்லை.இதன் காரணமாக எதிர்காலத்தில் எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது.எதிர்கால தொழில் இல்லாமல் நாங்கள் பாதையில் விழுந்து விட்டோம்”.

அதற்கமைய இதற்கு தீர்வொன்றை காண இரண்டாம் மொழி பயிற்சி ஆசிரியர்கள் நாளை(16) காலை 9 மணியளவில் ஒன்லைன் போரட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.