பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் மேலும் நீடிப்பு

0
439

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.இருப்பினும் நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்காதோர் வரும் 21 ஆம் திகதி,22 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.