பிரான்ஸில் இடி மின்னலுடன் கூடிய புயல் தாக்கம்

0
332

பிரான்ஸில் கடும் வெப்பத்தையடுத்து இடியுடன் கடும் மின்னல் தாக்கம்,பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றிரவு பிரான்ஸ் பிராந்தியத்திற்குற்பட்ட 51 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன்,நூற்றுக்கணக்கான மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள சிரற்ற காலநிலை காரணமாக பிரான்ஸின் பூங்காக்கள்,பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் இடுகாடுகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இல்-து-பிரான்ஸின் Essonne மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.RER C,D,E ரயில் சேவைகளுக்கும் நேற்றைய தினத்தில் மாலை வேளையில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு மத்திய மாவட்டமான Indre-et-Loire பகுதியில் உள்ள கிராமத்தில் இடி மின்னலுடன் மினி சூறாவளி ஏற்பட்டதன் காரணத்தினால்,அந்த கிராமத்தில் இருந்த தேவாலயத்தின் மணிக்கோபரத்தின் மேற்பகுதி பிய்தெறியப்பட்டுள்ளதுடன்,அதன் இடிபாடுகள் சில வாகனங்களின் மேல் விழுந்ததால், வாகனங்கள் சேதடைந்துள்ளதுடன்,யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அருகில் இருந்த கிராம மண்டபத்தின் கூரையும் புயல் காற்று பெயர்த்துள்ளது.அச் சமயத்தில் குறித்த மண்டபத்தில் தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஆயத்தங்களில் சிலர் ஈடுப்பட்டிருந்த வேளை,அவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indre-et-Loire என்ற மாவட்டத்தின் வைன் தோட்டப் பிரதேசமாகிய Saint-Nicolas-de-Bourgueil என்ற பகுதியில் புயல் காரணமாக,40 இற்கும் மேற்பட்ட வீடுகளும் ஒரு தேவாலயமும் சேதமடைந்துள்ளதுடன்,மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்காணிப்பு ஹெலிகொப்டர் மூலம் புயல் காரணமாக சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் மற்றும் மழை சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை பிரான்ஸ் நகர நிர்வாகம் பின்வருமாறு வெளியிட்டுள்ளது.

  • மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் மற்றும் காடுகளுக்குள் நடப்பதை தவிர்க்கவும்.
  • வீட்டிற்கு வெளியே கையடக்கத் தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • நிலத்தில் வீழ்ந்து கிடக்கக் கூடிய மின் வயர்களை தொட வேண்டாம்.
  • எங்காவது தீப்பற்றுவதை காண்டால் உடனடியாக தீயணைப்பு சேவைக்கு அறிவிக்கவும்.
  • முடிந்தவரை வெளியே செல்வதையும் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கவும்.