நுவரெலியா மாவட்டத்தின் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாவது,மொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொத்மலை பொலிஸ் பிரிவின் கலுதமத,ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் பஹலகொரக ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கடையில் 12 மாவட்டங்களுக்குற்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,12 மாவட்டங்களுக்குற்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி நேற்றைய தினம்(20) தெரிவித்திருந்தார்.





