கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய் பால் கொடுக்கும் 50 தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக,குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாய்மார்கள் 10 பேர் வரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்ப்பிணி தாய்மார் அல்லது தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கும் மேலாக காய்ச்சால் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு பிரவேசித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.





