பொலிஸ் அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு,பொலிஸ் நிலையத்தில் தனியான பிரிவொன்றை அமைப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு “இராணுவப் பொலிஸ்” என்று தனியான பிரிவு ஒன்று உள்ளதாகவும்,அதே போன்று பொலிஸ் நிலையத்திலும் அமைப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்த யோசனையை ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் ஏனைய முறைக்கேடான நடவடிக்கைகளை தடுப்பதற்கு இது போன்ற ஒரு தனிப்பிரிவு அவசியம் தேவை எனவும்,இந்த நாட்களில் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





