நேற்றைய தினம்(26) கொரோனா தொற்று காரணமாக 39 மரணங்கள பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மரணங்களில் 12 பேர் பெண்கள் எனவும் ஏனையோர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,245 பேர் இன்றைய தினம்(27) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 252,996 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





