மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியது வெளவால்களினாலா???

0
290

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கம் உட்பட சில விலங்குகளுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றானது வெளவால்களினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இருப்பினும் அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவலை மிருக காட்சிசாலையில் முதலில் தோர் எனும் பெயரினை உடைய சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.தற்போது அந்த சிங்கத்தின் உடல் நிலையை பார்க்கும் பொழுது திருப்திகரமாக இருப்பதாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான மற்றொரு சிங்கம்,2 குரங்குவகைகள்,2 சிம்பன்ஸிகள் ஆகியவற்றின் உடல் நிலை சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டதாகவும்,தெஹிவலை மிருக காட்சிசாலை உட்பட அனைத்து உயிரியல் பூங்காக்களும் எதிர்வரும் திங்கட்கிழமை(26) மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிருகக்காட்சிசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதால் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் அவற்றிற்கான ஏனைய தேவைகளுக்கான செலவுகளை மேற்கொள்வதற்கு கடினமாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.