கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் வட மாகாண பிரதம செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்,அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மேற்குறித்த தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(24) வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களால் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





