60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை(05) காலை 8.30 மணிதொடக்கம் சைனோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை,கலுபோவில வைத்தியசாலை,ஐ.டி.எச் வைத்தியசாலை மற்றும் அவிசாவளை வைத்தியசாலை,விகாராமாதேவி பூங்கா ஆகிய இடங்களில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.





