றாகம போதானா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நிரம்பியுள்ளனர்!!!

0
292

றாகம போதானா வைத்தியசாலையின் கொரோனா அறையிலுள்ள படுக்கைகள் நோயாளர்களால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோயாளர்களுக்கு தேவையான பொது வசதிகள் குறைவாக காணப்படுவதாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகளவான நோயளர்கள் தரையில் உறங்குவதாகவும்,பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சிகிச்சைகளை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 26 நபர்களின் உடல்கள் அறையின் நடுப்பகுதி தரையில் வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

றாகம போதானா வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் சம்பத் லியனகே ரணவீர அவர்கள் மேற்குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்த போது,கொரோனா தொற்றின் நான்காம் அலை காரணமாக, றாகம போதானா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் 2 அறைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட,3 மடங்கு தொற்றாளர்கள் தினமும் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் நிலவுகின்ற தீவிர நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையிலும் 236 படுக்கை வசதிகளை கொண்ட 10 அறைகளில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரவித்துள்ளார்.

அத்துடன் இந்த வாரத்திற்குள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 28 படுக்கை வசதிகளை கொண்ட அறையொன்று திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது காரியாலயத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தற்சமயம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தற்போது 2 வைத்தியர்கள் உட்பட 10 செவிலியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் றாகம போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை,இருதய சிகிச்சை,சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை,மகப்பேறு உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மத்தியில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதை மறந்து விட முடியாது என வைத்தியர் சம்பத் லியனகே ரணவீர அவர்கள் தெரிவித்துள்ளார்.