ஹொரணையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற பேருந்தொன்றில் பயணித்த பெண்ணொருவர் இருக்கையில் அமர்ந்திருந்தவாரு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை நடத்துனர் அவதானித்த போது அவரது வாய் திறந்திருந்ததாகவும்,பின்னர் அவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் வயது சுமார் 60-65 இற்கு இடைப்பட்டதாக காணப்படும் எனவும்,அவர் சம்பந்தமான தகவல்கள் இதுவரையான காலப்பகுதியிலும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





