சட்ட விரோதமாக இலங்கைக்குள் பிரவேசித்து பதுங்கிருந்த இளைஞர் கைது!!!

0
251

இந்தியாவின் ஈச்சமலை பிரதேசத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு வருகை தந்து யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 8 ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்து அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின் குருநகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்துள்ளார்.

அவர் பற்றிய தகவல்கள் அறியக்கிடைத்த பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த்தியுள்ளனர்.

அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டததை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.