கொரோனா தொற்றின் அவதானம் காரணமாக பாராளுமன்றத்தின் வைத்திய மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாராளுமன்ற உயர் அதிகாரியொருவரிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது, குறித்த வைத்திய மையத்தின் வைத்தியர் ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்டமையினால் குறித்த மையம் மூடப்பட்டுள்ளது.இந்த தகவல்கள் அறியக்கிடைத்தன் பின்னர் வைத்தியர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார என தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் குறித்த வைத்தியர் மற்றும் வைத்திய மையத்தில் பணிபுரியும் ஏனைய சேவையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என என்டிஜன் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
வைத்திய மையத்தை நேற்றைய தினம்(10) கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் இன்று(11) மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த தினங்களில் பாராளுமன்றத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





