அம்பலாந்தோட்டை நகரத்தின் அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றது..!

0
388

நாளைய தினம்(15) அம்பலாந்தோட்டையில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

அம்பலாந்தோட்டை நகரத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் மற்றும் அந்த பகுதயில் உள்ள மக்கள் அம்பலாந்தோட்டை நகரத்துக்கு அடிக்கடி வருவதனால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை ஒரு வாரத்திற்கு மாத்திரம் எனவும் அத்துடன் நாட்டின் சூழ்நிலையை பொருத்து எதிர்காலத்தில் கடைகள் மீண்டும் திறக்கப்படுமா? அல்லது தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கமா? என்பது தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எச்.பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.