மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை மீறிய 582 பேரை பொலிஸார் நேற்றைய தினம்(14) கைது செய்துள்ளனர்.
அத்துடன் பொலிஸாரினால் நேற்றைய தினம்(14) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தல் சட்ட நடவடிக்கைகளை மீறிய 108 பேரை கைது செய்துள்ளனர்.
அதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 543,59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்நுழையும் வாகனங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





