ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கு 80 வீதமான பகுதிகளை தலிபான் படைகள் கைப்பற்றின..!

0
331

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கு 80 வீதமான பகுதிகளை தலிபான் படைகள் கைப்பற்றியுள்ளன.இந்நிலையில் கந்தஹார் மற்றும் ஹெரத் என கூறப்படும் 2 பெரிய நகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தலிபான்களிடமிருந்து தலைநகரை பாதுகாக்க மீள அணிதிரளுமாறு முப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலிபான் மோதலை விடுத்து அரசியலில் அதிகாரத்திற்கு வருவதாற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.