புத்தளம் கட்டுகஹகல்கே குளத்தில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்கள் மொனராகலை டீசி வீதியில் வசிக்கும் 3 நண்பர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மொனராகலை தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(14) பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் மூவரும் இரவு வரை வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அப்பகுதி முழுவதுமாக அவர்களை தேடியுள்ளனர்.
அதன்பின்னர் அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் உறவினர்களால் புத்தளம் கட்டுகஹகல்கே குளத்திற்கு அருகில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நீரிழ் மூழ்கியுள்ளார்களா என்பதை அறிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்போது நீரில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல்களும் குளத்தின் அடிப்பகுதயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.





