ஒரு குழுவொன்றினால் இரண்டு இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!!!

0
338

ரத்கம சிரிகந்துருவத்தையில் இரண்டு இளைஞர்கள் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு இளைஞரின் கைது இரண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதாகவும் மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று வீதியில் நடந்து வந்த குறித்த 2 இளைஞர்களையும் தாக்கி வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களை தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயதங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் கைகள் துண்டிக்கப்பட்ட நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.