முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிப்பு..!

0
291

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் ஷியாப்தீன் இஸ்மத்தை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சேவைபுரிந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மொஹமட் ஹியாப்தீனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதன்படி சந்தேக நபர் 5 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.