பாரளுமன்ற கூட்டத் தொடர் நாளை மாத்திரம்..!

0
295

இன்று(16) காலை இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த வார பாராளுமன்ற அமர்வுகளை நாளைய தினத்திற்கு மாத்திரம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை(17) 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.

தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தை பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கடந்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.