இன்று பண்டாரவளை வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக 8 பேர் உயிரிழப்பு

0
276

தற்போது இலங்கையில் தினசரி பதிவாகும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 170ஐ அண்மித்து வருகின்றது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 171 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பண்டாரவளை நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக 8 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் அறை சிறியது எனவும் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் இல்லாத காரணத்தினால் சடலங்களை வைத்திருப்பதற்கு மிகவும் கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 4 சடலங்கள் பண்டாரவளை,தெமோதரை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய இடங்களில் உள்ள தகன கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.